சேர் முஹம்மது மாக்கான் மாக்கார்
நினைவு நூலகம்
அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் (BIA) கல்லூரியில் உள்ள சேர் முஹம்மது மாக்கான் மாக்கார் நினைவு நூலகத்தில் அரபு, ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய நான்கு மொழிகளிலும் உள்ள பல்லாயிரம் புத்தகங்கள் உள்ளது. பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் அரபு இதழ்கள் மற்றும் காலத்திற்கு தேவையான இதழ்கள் போன்றவைகளால் மாணவர்கள் பெரிதும் பயனடைகிறார்கள். இதன் மூலம் அவர்களின் அறிவை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் இது உதவுகிறது.
இக்கல்லூரியின் நூலகத்தில் வேறு எங்கும் காண முடியாத பல அரிய தனித்துவமான புத்தகங்களும் எல்லா துறைகளிலும் பிரபல்யமான மிக முக்கியமான புத்தகங்களும் மற்றும் கையெழுத்துக்கள் மூலம் எழுதப்பட்ட புத்தகங்களும் உள்ளது. இது ஓர் மிகப் பழமை வாய்ந்த நூலகமாகும்.
இஸ்லாமிய ஆய்வுகளில் ஆர்வமுள்ள ஆய்வாளர்களுக்கும் மற்றும் கற்கக்கூடிய மாணவர்களுக்கும் சிறந்த மிக முக்கியமான புத்தகங்கள் இந் நூலகத்தில் இருக்கிறது. இதன் மூலம் அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள இது உதவுகிறது. இந் நூலகத்தில் கையெழுத்துக்களால் எழுதப்பட்ட புத்தகங்களில் சில 👉
| புத்தகங்களின் பெயர்கள் | எழுத்தாளர் | வெளியிடப்பட்ட ஆண்டு |
|---|---|---|
| அல் அராஇஸுல் குத்ஸிய்யாஹ் | அஹ்மத் பின் அல்-ஹாஜ் அதியா | H 1163 / A.D. 1750 |
| பத்ஹுல் முஈன் வ உம்ததுஸ் ஸாலிக் | அஹ்மத் இப்னு மீரான் லெப்பை இப்னு அஹ்மத் | H 1233 / A.D. 1818 |
| இர்ஷாதுல் இபாத் வ முகாஷபதுல் குலூப் | தாசிம் ஆலிம் | H 1270 / A.D. 1854 |
| முர்ஷிதுத் துல்லாப் | தாவூத் நைனா லெப்பை | H 1295 / A.D. 1878 |
| உம்ததுஸ் ஸாலிக் வ உத்ததுந் நாஸிக் | உமர் இப்னு முஹம்மது தம்பி | H 1326 / A.D. 1908 |
| மத்னுல் ஆஜ்ரூமிய்யாஹ் | முஹம்மது இப்னு அபூபக்கர் இப்னு அலி | H 1329 / A.D. 1911 |
| தஸ்ஜீதுத் தரீக்கதிஸ் ஸாதுலீயா | அஹ்மத் இப்னு உமர் லெப்பை | H 1353 / A.D. 1934 |
| தப்ஸீருல் ஜலாலைன் | தெரியவில்லை | தெரியவில்லை |
| மஜ்மூஅதுந் நஹ்வு | தெரியவில்லை | தெரியவில்லை |
| கிஸ்ஸதுத் தஜ்ஜால் | தெரியவில்லை | தெரியவில்லை |
