தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி கல்வியறிவு

Untitled (53) (1)

இக்கல்லூரியில் ஒரு நவீன கணினி ஆய்வகம் உள்ளது. மாணவர்களுக்கு முழுமையான தகவல் தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்காக வேண்டி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணினி சம்பந்தப்பட்ட முழுமையான அறிவுகளை அடிப்படையிலிருந்து தொழில்நுட்ப பயிற்சிகளில் சரளமாக ஈடுபடுத்தப்படுகின்ற வரைக்கும் பயிற்சிவிக்கப்படுகின்றது.

இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் இரண்டாம் வருடங்களில் மார்க்க அறிவுகளை மாத்திரம் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. மூன்றாம் வகுப்பு தொடக்கம் இக்கல்லூரியிலிருந்து வெளியாகும் வரை கணினி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகளும், கற்கைகளும் கற்பிக்கப்படுகின்றது.

தகவல் தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு அடிப்படையிலிருந்தே கற்பிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் இப்பாட நெறியின் உள்ளடக்கத்தை எளிதாக புரிந்து கொண்டு கற்றுக் கொள்வதற்கு இலகுவாக அமைகிறது. ஆரம்பத்தில், மாணவர்கள் Microsoft Office தொகுப்புகள், புகைப்படம் (Photo) மற்றும் வீடியோ எடிட்டிங், இணைய அடிப்படைகள், வலை வடிவமைப்பு (Web Designing) மற்றும் அடிப்படை கணினி சரிசெய்தல் உள்ளிட்ட மிக முக்கியமான நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது.

அடிப்படை கற்கைகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் மொரட்டுவை பல்கலைக்கழகம் வழங்கும் கணினி நிரலாக்க பாடநெறி மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) வழங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) பாடநெறி போன்ற விசேட பாடநெறிகளை அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றோம். இந்த கற்கைகள் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வெகுமதியான தொழில்களையும் மற்றும் நவீன காலத்திற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப பாட நெறியின் பூர்த்தியான அறிவையும் பெற்று வாழ்க்கையில் வெற்றிகரமான ஓர் இடத்தை அடைந்து கொள்ள முடியும். அது மாத்திரமின்றி இந்த கற்கைகளுக்கு பின்னால் பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பெருமதி மிக்க சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.

பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்

  • செயற்கை நுண்ணறிவு (AI) / இயந்திர கற்றல் (ML) அறிமுகம்
  • AI மற்றும் MLக்கான முன்நிபந்தனைகள்
  • ML க்கான கருவிகள் (Tools)
  • கணினி பார்வையில் வழிகாட்டப்பட்ட திட்டம்
  • இயற்கை மொழி (Natural Language Processing) செயலாக்கத்திற்கான வழிகாட்டுதல் திட்டம் (NLP)
  • ஆய்வறிக்கை
  • ஆரம்பநிலைக்கான வலை வடிவமைப்பு (Web Designing)
  • பைதான் (Python) புரோகிராமிங்
  • ஃப்ரண்ட் எண்ட் (Front End) வெப் டெவலப்மெண்ட்
  • சர்வர்-சைட் (Server Side) வெப் புரோகிராமிங்
  • தொழில்முறை பயிற்சி

தகவல் தொழில்நுட்ப கற்கை ஆசிரியர்

Untitled (61) (1)

முஹம்மது ரிஸ்வான் உக்காஸ்