கல்விக்கான பொதுச் சான்றிதழ் (GCE)
சாதாரண தரம் (O/L) & உயர்தரம் (A/L)

அல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியில் க. பொ. த சாதாரணதரப் பரீட்சை மற்றும் க. பொ. த உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார்படுத்துகின்றோம். தினந்தோறும் அஸர் தொழுகைக்குப் பிறகு அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மூலம் பரீட்சைகளுக்கு முகம் கொடுப்பதற்காக வேண்டி நமது மாணவர்கள் கற்பிக்கப்பட்டு தயார்படுத்தப்படுகின்றார்கள். அத்தோடு சிங்கள மொழியில் சரளமாக பேசுவதற்காக வேண்டி சிங்கள பாடமும் கற்பிக்கப்படுகின்றது.

சாதாரண தர பரிட்சைக்கு முகம் கொடுப்பதற்காக வேண்டி இக்கல்லூரியில் விஞ்ஞானம், தமிழ், கணிதம், ஆங்கிலம், வரலாறு, இஸ்லாம், அரபு மொழி, அரபு இலக்கணம் மற்றும் சுகாதாரம் போன்ற கற்கைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. 

உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக வேண்டி இக்கல்லூரியில் கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்குள் ஊடகம் மற்றும் தொடர்பாடல் கற்கைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு அந்த நேரத்தில் மேலதிக கருத்தரங்குகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி அவர்கள் அதிகமான புள்ளிகளை பெற்றுக் கொள்வதற்கு இக்கல்லூரி ஒத்துழைப்பு வழங்குகிறது.

க. பொ. த உயர் தர சாதாரண தர ஆசிரியர்கள்

Untitled (47) (1)

S. A. C. M. M. பாழில் மௌலானா
(A/L - தொடர்பாடல் மற்றும் ஊடகம்)

Untitled (49) (1)

E. H. G. பெர்னாண்டோ
(சிங்கள மொழி)

Untitled (50) (1)

M.S.M. ஹிஷாம்
(O/L - தமிழ் மொழி)

Untitled (75) (1)

A.J.M. ராசிக்
(O/L - வரலாறு)

Untitled (74) (1)

M. நுஸ்ரி
(O/L - விஞ்ஞானம்)