உயர்கல்விக்கான சான்றிதழ்
இஸ்லாம் மற்றும் அரபுக் கற்கைகள்

Untitled (76) (1)

அல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியில் நடாத்தப்பட்டுவரும் ஏழு வருடங்களைக் கொண்ட இஸ்லாமிய மற்றும் அரபுக் கற்கைகளுக்கான (மௌலவி) பாடத்திட்டம் இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் உடைய பாடத்திட்டத்தில் இருந்து சங்கைக்குரிய இமாமுல் அரூஸ் முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் அடித்தளமிட்டு கற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இப்பாடத்திட்டம் பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கியுள்ளது. இல்முல் அகீதா (இறையியற் கொள்கை), இல்முல் பிக்ஹ் (இஸ்லாமிய சட்டக்கலை), இல்முத் தசவ்வுப் (ஆன்மீகத் துறை), இல்முல் ஹதீஸ், இல்முத் தப்சீர் (அல் குர்ஆன் விரிவுரை), இல்முல் மீராஸ் (வாரிசுரிமை சட்டக்கலை) இல்முல் மந்திக் (தர்க்க சாஸ்திரம்), இல்முல் பலாகா (சொல் வண்மைக்கலை) மற்றும் பல இஸ்லாமிய கற்கைகள் பற்றிய விரிவான புரிதலை மாணவர்களுக்கு இப்பாடத்திட்டம் வழங்குகிறது.

இக்கல்லூரியில் கல்விக்கற்கும் நேரத்தில் பேணப்பட வேண்டிய விதிகள் மற்றும் ஒழுக்கங்கள் நன்றாக கவனம் செலுத்தப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்தே மாணவர்கள் இக்கல்லூரியின் விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அரபு மொழி மற்றும் அரபுஇலக்கணத்தில் உறுதியான அடித்தளத்தை உருவாக்க சர்பு, நஹ்வு கலைகளை கற்பிப்பதிலே ஆரம்பக் கட்ட முயற்சிகள் நடைபெறும்.

மாணவர்கள் அதி கூடுதலான பாடங்களை பல நூல்கள் மூலம் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. இதில் அரபு இலக்கணம், அரபு இலக்கியம், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஓர் முழுமையான அறிவு, முறையான அரபு எழுத்துத்திறன், உச்சரிப்பு பயிற்சி, இஸ்லாமிய சட்டங்களின் பிரச்சினைகள் வரும் பொழுது அதை தீர்ப்பதற்கான வழிகள், ஹலால் மற்றும் ஹராம் போன்றவைகளை வேறு பிரித்து அறியக்கூடிய அறிவுகள் இக்கலா பீடத்தில் கற்பதனால் கிடைக்கும்.

இக்கல்லூரியின் பாடத்திட்டமானது விமர்சன ரீதியான சிந்தனைகளைப் பற்றிய தெளிவு , ஆராய்ச்சி திறன் மற்றும் இஸ்லாமிய கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதல் போன்றவைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் விவாதங்களில் ஈடுபடவும், கேள்விகளைக் கேட்கவும், அவர்களின் படிப்பு முழுவதும் பல்வேறு கண்ணோட்டங்களை ஆராயவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இக்கல்லூரி பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் (விளையாட்டு, கல்விச் சுற்றுலாக்கள்) மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபடக்கூடிய அமைதியான சூழலை கொண்டுள்ளது. இந்த அனுபவங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுவதோடு மாணவர்கள் தங்கள் அறிவை நிஜ உலக சூழலில் பயன்படுத்த வாய்ப்பளிக்கின்றது.

பாடத்திட்டத்தின் உள்ளடக்கம்

பாடங்கள் வருடம் 1 வருடம் 2 வருடம் 3 வருடம் 4 வருடம் 5 வருடம் 6 வருடம் 7
சந்தர்ப்ப துஆக்கள் ✓ ✓
அரபு எழுத்தணி ✓ ✓
அல்குர்ஆன் ஓதற்கலை ✓ ✓ ✓
அரபுச் சொல் இலக்கணம் ✓ ✓ ✓ ✓
அல்-குர்ஆன் மனனம் ✓ ✓ ✓ ✓
அல்-ஹதீஸ் ✓ ✓ ✓ ✓ ✓
அரபு மொழி ✓ ✓ ✓ ✓ ✓
இஸ்லாமிய சட்டவியல் ✓ ✓ ✓ ✓ ✓
இறையியல் (இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடு) ✓ ✓ ✓ ✓ ✓
அரபு இலக்கணம் & இலக்கியம் ✓ ✓ ✓ ✓
ஆன்மீகக் களம் ✓ ✓ ✓
சொல் வண்மைக்கலை ✓ ✓ ✓
அல்-குர்ஆன் விளக்கம் ✓ ✓ ✓
இஸ்லாமிய வரலாறு ✓ ✓ ✓
அல்-குர்ஆன் அடிப்படை அறிவுகள் ✓
அல்-ஹதீஸ் அடிப்படை அறிவுகள் ✓
சட்டக்கலை அடிப்படை அறிவுகள் ✓ ✓
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள் ✓ ✓
தர்க்க சாஸ்திரம் ✓ ✓
இஸ்லாமிய தீர்ப்பு விதிகள் (பத்வா விதிகள்) ✓ ✓
தஃவாவின் அடிப்படை விதிகள் (மக்களை இஸ்லாத்திற்கு அழைப்பது) ✓ ✓
வானவியக்கலை ✓ ✓
கவிக்கலை ✓

இஸ்லாமிய கற்கை ஆசிரியர்கள்

Muhammad Razooq (Bahji) (Principal)

Al Usthaz M. Razooq Al-Bahji
அதிபர் BIA கல்லூரி

Muhammed Mujeebullah (Bahji)

Al Usthaz M. Mujeebullah Al-Bahji
உப அதிபர்

Muhammad Safran (Bahji)

Al Usthaz M. Safran Al-Bahji

Al Usthaz M. Farwis Al-Bahji