அல் பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா அரபுக் கல்லூரியின் புதிய கணினி ஆய்வகம் திறப்பு
நவம்பர் 2 2023 அன்று அல் பஜத்துல் இப்ராஹீமியா அரபுக் கல்லூரியில் ஒரு புதிய கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது இதில் நவீன வசதிகள் கொண்ட கணினிகள் மற்றும் அதற்குத் தேவையான ஏனைய சாதனங்களும் காணப்படுகின்றது.
இக்கல்லூரியின் ஸ்தாபகர் அவர்களின் பேத்தியான மர்ஹூமா பாத்திமா லைக்கா ஷம்சுதீன் அலி அவர்களின் அன்பு நினைவாக அவர்களின் பெயரில் அல் பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா அரபுக் கல்லூரிக்கு இக்கணினி ஆய்வகம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இன்று உலகம் நவீன டிஜிட்டல் ஊடகத்திற்கு அடிபணிந்துள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதன் அடிப்படையில் இன்று உலகத்தில் முகம் கொடுப்பதற்கு தகவல் தொழில்நுட்ப கற்கை கற்க வேண்டும் என்பது ஒரு சவாலாக அமைந்துள்ளது.
இந்த நவீன வசதிகள் கொண்ட கணினி ஆய்வகத்தின் மூலம் மாணவர்கள் இக்கற்கையை கற்றுக் கொண்டு இன்று இவ்வுலகில் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு வழியை இவ்வாய்வகம் செய்து கொடுக்கின்றது.
இக்கணினி ஆய்வகம் இக்கல்லூரியின் மாணவர்களுக்கு பல வழிகளிலும் பயனளிக்கின்றது. தகவல் தொழில்நுட்பக் கற்கையின் அடிப்படை அறிவை கற்றதன் பிற்பாடு மொரட்டுவை பல்கலைக்கழக பரீட்சைக்கும் தயார்படுத்தப்படுகிறார்கள். மேலும் வெகுமதி மிக்க சான்றிதழ்களும் இக்கற்கை நெறியை கற்றதன் பிற்பாடு இக்கணினி ஆய்வகத்தின் மூலம் கொடுக்கப்படுகின்றது.
மேலும் இக்கணினி ஆய்வகம் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள் உட்பட பலருக்கும் பிரயோசனம் அளிக்கிறது.