BIA கல்லூரியில் கல்வி கற்ற மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி கல்லூரிக்கு வருகை
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம் அண்மையில் காலி கோட்டையிலுள்ள அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் (BIA) கல்லூரிக்கு விஜயம் செய்தார். அவரை கல்லூரியின் அதிபர் கலீபதுஷ்ஷாதுலீ அல் உஸ்தாத் முஹம்மது ரஸூக் (பஹ்ஜி) அவர்கள் பெரும் வரவேற்பளித்து வரவேற்றார்கள்.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் இக்கல்லூரியில் கற்றதாகவும் அந்த நன்றிக்காக இங்கே சமூகம் தந்ததாகவும் அவர்கள் கற்கின்ற காலத்தில் கண்ட அனுபவங்களையும் அவர்கள் இதனூடாக பெற்ற பயன்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்கள். இவர்களது வருகை மாணவர்களுக்கு மத்தியில் ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.