அகில இலங்கை அரபுக் கல்லூரிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று
முதலாம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் இக்கல்லூரி மாணவர்கள் சுபிகரித்துக் கொண்டார்கள்

மே 30, 2024 அன்று நடைபெற்ற காலி மாவட்ட கட்டுரைப் போட்டியில் BIA கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்தப் போட்டியை அஸ்ஸாவியத்துல் அலியா லித் தரீகதீஷ் ஷாதுலியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்தனர். கட்டுரைத் தலைப்பாக "ஷாதுலிய்யா தரீக்கா மற்றும் இமாமுனா அபுல் ஹசன் அலியுனிஷ் ஷாதுலீ - ரழியல்லாஹு அன்ஹு" என்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

BIA கல்லூரியின் இரு மாணவர்கள் முதலாமிடத்தையும் ஐந்தாமிடத்தையும் பெற்றனர். முதலாமிடத்தைப் பெற்ற சிரேஷ்ட வகுப்பு மாணவர் முஹம்மது பர்விஸ் முஷாரப் அவர்களுக்கு 25,000 ரூபாவும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.ஐந்தாம் இடத்தைப் பெற்ற நான்காம் வகுப்பு கற்கும் மாணவர் முஹம்மது சாபித் அவர்களுக்கு 5,000 ரூபாவும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

1 and 5